வருமான வரி கணக்கு ஜூலை 31 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, நீங்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய வரி விதிப்பின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
அதே சமயம், புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் பான் மற்றும் ஆதாரை இணைக்கும் அனைவருக்கும் ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்படும்.
எனவே மொத்த செலவு ரூ.6000 செலுத்த வேண்டி இருக்கும். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் பான், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இதனை செய்து முடிக்க வேண்டும்.