சேலம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், PHH குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் 355,694 குடும்ப உறுப்பினர்களும், AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் 63,531 குடும்ப உறுப்பினர்களும், தங்களது e KYC பதிவினை நாளதுவரை மேற்கொள்ளாமல் உள்ளனர். எனவே. e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடையிலும், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபர்கள் தாம் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று IMPDS, eKYC மூலம் 25.032025 க்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.