செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதனையடுத்து, சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை விரைவில் கொண்டுவர உள்ளது.
இந்நிலையில், ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தில் உங்களுக்கான வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு ChatGPT உதவியுடன் பதில் அனுப்பம் வசதி உள்ளதாக இணையவாசிகள் கூறிவருகின்றனர். உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. ஆனால், சில நேரங்களில் ஒவ்வொரு செய்திக்கும் பதிலளிக்க அனைவருக்கும் நேரமோ உந்துதலோ இருப்பதில்லை. எனவே AI சாட்பாட் உங்களுக்காக அதை செய்யும் என்பதால், எல்லா செய்திகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. தற்போது வரை இந்த புதிய அம்சம் பற்றி வாட்ஸ் அப் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லை என்றாலும், பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் வழியாக இதைச் சாத்தியமாக்கலாம் என இணையவாசிகள் கூறுகின்றனர்.
GitHub என்ற ஏஐ வலைதளத்தின் உதவியின் மூலம் பயனர்கள் ChatGPT ஐ WhatsApp உடன் ஒருங்கிணைக்க முடியும். இதன் டெவலப்பர் இதற்காக ஒரு பைதான் ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். இது ChatGPT ஐ WhatsApp இல் ஒருங்கிணைக்க உதவுகிறது. WhatsAppல் உங்களுக்கு வரும் மெஸேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து AI பதிலளிக்கும் என இணையவள்ளுனர்கள் தெரிவிக்கின்றனர். இதை பயனர்கள் முயற்சி செய்து பார்க்க https://github.com/danielgross/whatsapp-gpt என்ற இணையதளத்தை அனுகலாம். பயனர்களின் இதன்மூலம் எதிர்கொள்ளும் சாதக பாதகங்களை அவர்களின் கைகளிலே விடப்பட்டுள்ளது.