தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் இன்று முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளனர். நேற்று முதல்நாள் முதல் கட்ட ஆய்விற்கு பின் பேசிய மத்திய குழு, “2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நான் மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு பாராட்டுக்கள் என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. அதில், செம்பரம்பாக்கத்தை உரிய நேரத்தில் நீர் திறந்துவிட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகாலுக்கான சிறப்புத் திட்டம் தேவைப்படுகிறது. கனமழையின்போது பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க விரிவான நீண்டகால திட்டமிடல் தேவை என மத்தியக் குழுத் தலைவர் குணால் சத்யார்த்தி பேட்டி அளித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த பிறகு, அதற்கான விரிவான மதிப்பீட்டை இக்குழு தயாரிக்க உள்ளது. அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி, நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணமாக கேட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 500 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் அறிக்கைக்கு பின் மொத்த தொகை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.