போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சருக்கு மூன்றாம் நிலை விசாரணையை மேற்கொள்ளக்கூடாது. உடல் தகுதி குறித்து மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னரே விசாரிக்க வேண்டும். உடல் நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்த இடையூறு என்று அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அமைச்சருக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறியது.