மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த 26ம் தேதி இரவு, நிகில் அசோக் (30) , என்ற நபர் 38 வயது பெண்ணின் ஆட்டோவில் ஏறினார். அந்த பெண் டிரைவரிடம் தான் கட்ராஜ் காட் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு, ஆட்டோ இரவு 10 மணியளவில் கட்ராஜ் காட் சென்றடைகிறது. காட்டுக்குள் இருந்த விடுதி அருகே ஆட்டோவை நிறுத்துமாறு நிகில் கூறினார். அதன்பின், பெண் டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார்.
பெண் டிரைவருடன் நிகில் தகாத வார்த்தைகளால் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தனது ஆடைகளை களைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதன்பின் அந்த பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினார்.
அவ்வாறு அவர் தப்பித்து ஓடிய நிலையிலும் அவரை விடாமல் பயணியும் பெண் டிரைவரை நிர்வாணமாகவே துரத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து, அந்த பெண்மணி ஓடிவிட்டார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மகர்பட்டாவை சேர்ந்த நிகில் அசோக்கை போலீசார் கைது செய்தனர்.