fbpx

விமான நிலைய வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை ….  ஓட்டுனரான இளைஞர் தன் வாகனத்திலேயே உயிர்நீத்தார்….

சென்னை விமான நிலைய வளாகத்தில் வேன் ஓட்டுனர் தன் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுந்திர ராஜன் (38) . இவர் சென்னை விமான நிலைய வளாகத்தில் சரக்கத்தில் , தனியார் சரக்கு நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தனியாகத்தான் சென்னை வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான விழுப்புரத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தனது மனைவிக்கு தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தன் மனைவியிடம் ’’ நான் தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன்’’ என கூறியுள்ளார். இதனால் அவரது மனைவி சக ஓட்டுனர்களுக்கு போன் செய்து அவர் , இப்படி பேசுகின்றார் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென சவுந்தரராஜனை காணவில்லை. எப்படியும் இங்குதான் இருப்பான் என நினைத்த ஓட்டுனர்கள் உறங்கிவிட்டனர். காலையில் சவுந்திரராஜனின் சரக்கு வேனில் தூக்கில் தொங்கியபடி ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து அவரது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.

Next Post

’விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது’..! ஷாகித் அப்ரிடியை தொடர்ந்து இவருமா?

Thu Sep 15 , 2022
விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்த நிலையில், ஷோயப் அக்தரும் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தனது 70ஆவது சதத்தை அடித்த விராட் கோலி, அதற்கு பிறகு சீரான விகிதத்தில் ரன்கள் அடித்தாலும் 3 வருடத்தில் 100 என்னும் இலக்கை அடைய முடியாமல் தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்நிலையில், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் […]
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி..? இன்று கடைசி போட்டி..!

You May Like