fbpx

பெற்றோர்களே கவனம்!!! இன்ஸ்டாகிராமில் மூழ்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்…

சென்னை பெருங்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இவரது இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது இளைய மகளுக்கும், பெரம்பூரை சேர்ந்த 18 வயது நபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பெரம்பூர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக பேசி வந்துள்ளனர். வழக்கம் போல், கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதலர்கள் இருவரும் பூங்காவில் சந்தித்து உள்ளனர். அப்போது அவரது காதலன், ”தனது வீட்டில் யாரும் இல்லை என்றும், அங்கு சென்றால் இருவரும் ஜாலியாக பேசலாம்’ என்று கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவரது வீட்டில் வைத்து, வாலிபர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மாணவியை அனுப்பிவைத்து விட்டு, தொடர்ந்து அவரை சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் வயிறு பெரிதாகியுள்ளது, இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரித்துள்ளார். முதலில் வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று கூறிய அவர், தாயின் கேள்விகளால் சிக்கிகொண்ட பின் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக மாணவியை அழைத்துச்சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை தேடி வருகின்றனர்.

Read more: 1 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!!! கள்ளக் காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!!

English Summary

young-man-sexually-abused-a-school-girl

Next Post

'நீயெல்லாம் என்ன கேள்வி கேக்குறீயா?' பழங்குடியின பெண் மீது தாக்குதல்.. வாயில் மனித மலத்தை திணித்த கொடூரம்..!!

Thu Nov 21 , 2024
An incident in Odisha where a young tribal woman was assaulted and stuffed with excrement in her mouth has left a shocker.

You May Like