திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள தொட்டியம் அருகில் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையத்தில் சுவிசன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 38 வயது பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் அவரது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் அந்தப் பெண் பார்க்கும்படி அவரின் எதிரே ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டு வாலிபர் இவ்வாறு முகம் சுளித்து அருவறுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சுவிசனை என்பவரை கைது செய்துள்ளனர்.