fbpx

வேறொருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…! சந்தேகித்த கணவன்…! மனைவி எடுத்த விபரீத முடிவு

கணவருக்கு தன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கும்மிடிப்பூண்டி அருகே ராமச்சந்திராபுரத்தில் உள்ள தனியார் ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் நேபாளத்தைச் சேர்ந்த பாபின் குருங். இவருடன் இவரது மனைவி அமிகா குருங். இந்நிலையில் அமிகா குருங் செல்போனில் வேறொருவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததாக தெரிகிறது.

இதனை பாபின் கண்டித்து இருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பிய போது அவரது மனைவி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கணவர் தனது நடத்தையில் சந்தேகம் கொண்டதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.91 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை...!

Wed Nov 22 , 2023
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.91 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. நேஷனல் ஹெரால்டு என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ். 1937-ம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நேரு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. 1942-ம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், […]

You May Like