திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் உடன் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார்.
திருமணமானதை மறைத்து கார்த்திக் அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 9-ம் தேதி, அப்பெண்ணை கோபால்பட்டி வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். அங்கே வந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி குடுத்து நெருக்கமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து 10-ம் தேதியில் இருந்து கார்த்திக் மாயமாகி விட்டார். செய்வதறியாது திகைத்து நின்ற பெண்ணை, அவரது பெற்றோரை வரவழைத்து ஊர் மக்கள் அனுப்பி வைத்தனர். இது பற்றி காவல்துறையில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.