fbpx

காஞ்சிபுரத்தில் வெறி செயல்! 23 வயது இளைஞர் வெட்டி படுகொலை! தந்தை மகன் கைது!

காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் சதாவரம் பகுதியைச் சார்ந்த தினகரன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பனை காண்பதற்காக சதாவரம் பகுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் தமிழ்வாணன். அவர் சதாவாரம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை மரித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தமிழ்வாணனை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் தமிழ்வாணன் .

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் காந்திபுரம் பகுதியைச் சார்ந்த குணசேகரன் மற்றும் அவரது தந்தை ரகு ஆகிய இருவரும் தான் தமிழ்வாணனை வெட்டி கொலை செய்தார்கள் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரின் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய இவர்கள் இருவரையும் காவல்துறையை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. எந்த காரணத்திற்காக தமிழ்வாணன் கொலை செய்யப்பட்டார் ? இவர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் முன்பாக இருக்கிறதா என்று ரீதியில் தீவிரமான விசாரணையில் இறங்கி இருக்கிறது காவல்துறை.

Rupa

Next Post

ஆசை ஆசையாய் செய்த திருமணம்! பிரசவத்தில் மனைவி மற்றும் குழந்தையை பறிகொடுத்த கணவன் செய்த பரிதாப செயல் !

Wed Mar 22 , 2023
கோவையில் மனைவி மற்றும் குழந்தை பிரசவத்தில் பலியானதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும்போது ராஜ்குமார் அந்தோணியம்மாள் என்பவரை காதலித்தார். பின்னிருவரும் திருமணம் செய்து தனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தோணியம்மாளுக்கு […]

You May Like