fbpx

”உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கு”..!! ஆம்ஸ்ட்ராங்கை முன்கூட்டியே 3 முறை எச்சரித்த போலீஸ்..!! அதையும் மீறி கொலை நடந்தது எப்படி..?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து உளவுத்துறையும், குற்றப்பிரிவு போலீஸாரும் உள்ளூர் போலீஸாருக்கு தெரிவித்தனராம். “உங்களை கொலை செய்ய ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். எதற்கு எச்சரிக்கையாக இருங்கள்” என போலீஸார் ஆம்ஸ்ட்ராங்கிடம் 3 முறை எச்சரித்தார்களாம்.

அதே போல் கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது. அந்த கும்பல்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருக்கக் கூடும் என்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங்கின் ஆதர்வாளர்கள் கூறுகையில், போலீஸார் எச்சரிக்கை விடுத்ததும் அண்ணன் (ஆம்ஸ்ட்ராங்) உஷாராகதான் இருந்தார்.

எனினும் அவர் தெருவில் கட்டும் வீடுதானே என சற்று கவனக்குறைவுடன் அங்கு சென்றுவிட்டார். அவருடன் இன்னும் சிலர் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. தனியாக, குறைந்த ஆட்களுடன் அண்ணன் எப்போது சிக்குவார் என கண்காணித்து, அந்த கும்பல் கொலை செய்துள்ளனர்” என கண்ணீருடன் தெரிவித்தனர்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

English Summary

A shocking information has come out about the murder of Bahujan Samaj Party state president Armstrong.

Chella

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை: "அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - BSP தலைவர் மாயாவதி கடும் கண்டனம்…!

Sat Jul 6 , 2024
Armstrong murder: "Government should take strict action" - BSP chief Mayawati strongly condemns...!

You May Like