fbpx

சொந்த இடம்… ரூ.1000 இருந்தால் போதும்… நீங்களே ஆவின் பாலகம் வைக்கலாம்…! முழு விவரம் இதோ

முன்னாள் படைவீரர்களை “ஆவின் பாலக முகவர்களாக” நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் விற்பனை பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை -35 அவர்களின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு என ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆவின் பாலக முகவர்” நியமனமானது ஆவின் நிறுவன இணையதளத்தில் (www.aavinmilk.com) (Vacant) பாலகம் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு பாலக முகவர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஆவின் பாலக முகவர்களாக” விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் பாலகத்திற்குண்டான விண்ணப்பப் படிவம் (www.aavinmilk.com) என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைப்பிரிவு நந்தனம், தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது முன்னாள் படைவீரர்கள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ கடை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தை அணுகி ரூ.1000 முன்பணம் செலுத்தி FRO முகவர் உரிமம் பெற்று பாலகம் நடத்தலாம். விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பித்து பயனடையலாம்.

English Summary

Your own place… If you have Rs. 1000, you can set up an Aavin branch yourself.

Vignesh

Next Post

உடல் உஷ்ணம் அதிகமா இருக்கா? அப்போ உடனே இப்படி தேய்த்து குளியுங்க... கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்..

Sun Feb 23 , 2025
best way to reduce body heat

You May Like