fbpx

கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய இளைஞர்…..! அதிரடியாக கைது செய்த கோவை காவல்துறையினர்…..!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆறு மாத காலமாக சஞ்சய் உடன் அந்த மாணவி பேசுவதை தவிர்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த மனைவி வழக்கம் போல கல்லூரியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குனியமுத்தூர் பகுதியில் இருக்கின்ற பெட்ரோல் பங்க் அருகே நின்று இருந்த அந்த இளைஞர் சஞ்சய், அந்த மாணவியை தடுத்து நிறுத்தி தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தி இருக்கிறார்.

ஆனால் இதற்கு அந்த மாணவியின் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆகவே ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர், அந்த மாணவியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில், சஞ்சையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

மக்களே உஷார்..!! பிளாஸ்டிக் பாத்திரங்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Sat Jul 29 , 2023
பொதுவாக சமையலில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு எதிராக பல சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். எந்த விதத்தில் அதை பயன்படுத்தினாலும், நமது உடலில் நஞ்சை கலக்கும் என்று பல ஆண்டு காலமாக சொல்லியும், குறைவான விலை காரணமாக மக்கள் அதனை வாங்குகின்றனர். இதற்கிடையே, சில நிறுவனங்களும் உணவு பொருட்களை சூடு செய்யக் கூட இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாம் என்று சில தயாரிப்புகளைக் கொண்டு வந்து மக்களை குழப்புகின்றனர். […]

You May Like