புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிறுவனங்கள் தங்களது தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகாமுக்கு வரும் இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் வர வேண்டும்.
அதேபோல், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து நாளை நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More : ’மும்மொழி வேண்டாம் என கூறுபவர்கள் பெயரில் தனியார் பள்ளிகள்’..!! விஜய், திருமாவை அட்டாக் செய்த அண்ணாமலை..!!