fbpx

பண்ணை வீட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட 22 வயது இளைஞர்.! சொத்துக்காக கொலையா.? விசாரணையில் காவல்துறை.!

திருச்சி அருகே பண்ணை வீட்டில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன். திருச்சியில் இயங்கி வரும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் யுவராஜ்(22). கௌதமனின் முதல் இரண்டு மனைவிகள் இறந்த நிலையில் பூமதி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட கௌதமன் உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் 6 பிள்ளைகளும் கௌதமனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர். கௌதமன் பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்ததால் அவரது வேலை அவரது மகனான யுவராஜ் கிடைத்தது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தச்சன்குறிச்சி பண்ணை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த யுவராஜ் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பூமதியின் அண்ணன் சின்னராசு மற்றும் அவரது மகன் வல்லரசு ஆகியோர் சொத்துக்காக யுவராஜை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறது.

Next Post

அதிர்ச்சி..!! தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 31 பேர் பலி..!! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்..!!

Fri Dec 22 , 2023
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனுக்குடன் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800 ரயில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படை, முப்படைகள் இணைந்து 5,049 பேர் மீட்கப்பட்டதாகவும் […]

You May Like