இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த டிரக் ஓட்டுனரான 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓட்டுனரின் கவனக்குறைவால் வாகனம் ஓட்டியதாகவும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் சென்ற வியாழக்கிழமை அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கைதான ஓட்டுனர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரியவந்துள்ளது.