சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் காரை, மற்றொரு காரில் வந்த நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் துரத்தி சென்றுள்ளனர். அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிச் செல்ல நினைத்த எதிர் காரில் இருந்த பெண்கள், அவர்களின் காரை ரிவர்ஸ் எடுத்தபடி நீண்ட தூரம் சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்கள், அப்பெண்களின் காரை ஒரு இடத்தில் வழிமறித்து அவர்களை மிரட்டியுள்ளனர். அதனை காரில் இருந்த பெண்கள் செல்போனில் அந்த காட்சியை வீடியோவாக பதிவிட்டபடியே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அரசியல் ரீதியாகவும் ஆளும் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறது.
பெண்கள் வெளியிட்ட வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் அந்த இளைஞர்களை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றனர். கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் முருகன் தலைமையில் இரண்டு தனிப்படை அனைத்து காரில் துரத்தியதாக கூறப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், வழிமறித்தல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more : நல்லிரவில் பெண்களை துரத்திய இளைஞர்கள்.. குற்றம் செய்ய திமுக கொடி லைசன்சா? – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்