fbpx

இளைஞர்களே உஷார்..!! வாட்ஸ் அப் மூலம் இப்படியும் உங்களை ஏமாற்றலாம்..!! ஜாக்கிரதையா இருங்க..!!

ஆன்லைன் மூலம் நாளுக்கு நாள் புதிய புதிய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சைபர் குற்றப் பிரிவு போலீசார் இதனால் பிஸியாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பல கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியும் பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸ் அப் வேலைவாய்ப்பு மோசடி புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர். 2 வருட கொரோனா தொற்றுக்கு பிறகு பொருளாதார நிலை மெல்ல மீண்டுவரும் நிலையில், பல இளைஞர்கள் வாய்ப்புகளுக்காக வெவ்வேறு வலைத்தளங்களைப் பார்க்கிறார்கள். அந்த வகையில் சாட்டிங் மூலம் பணி அமர்த்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனமான Hirect, அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களைக் கூறுகிறது.

நாட்டில் வேலை தேடும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 56% பேர் வேலைதோடும்போது மோசடிகளால் பாதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு மிகவும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உறுதி அளிப்பார்கள். கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காக பெரிய தொகையை தினசரி ஊதியமாகத் தருவதாகச் சொல்வார்கள். மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற மெசேஜ் வெவ்வேறு எண்களில் இருந்து வரும். ஆனால், கிட்டத்தட்ட இதேபோன்ற தகவல்கள்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த மேசேஜ்களில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதைக் கிளிக் செய்தால் போதும், உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதற்கு வசதியாக இருக்கும். சில நேரங்களில் யாராவது ஒருவர் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்களைக் கேட்பார்கள். பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த சொல்வார்கள். wa.me என்று தொடங்கும் லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் வாட்ஸ் அப் சாட்டிற்குள் செல்லும். மறுமுனையில் உள்ளவர் கூடுதல் விவரங்களைக் கேட்பார். எக்காரணத்தை கொண்டும் அவர் எதிர்பார்க்கும் பதிலைக் கொடுக்கக் கூடாது. இதேபோன்ற தந்திரம் கடந்த காலங்களில் பல முறை மோசடி பேர்வழிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உஷாராக இதுபோன்ற மெசேஜ்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்த மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யும் சில நடவடிக்கைகளை டெல்லி சைபர் க்ரைம் போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.

* உண்மையாக வேலை வழங்குபவர்கள் வேலைவாய்ப்பு பதிவு, ஆவணச் சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றுக்காக பெரிய தொகையைக் கேட்க மாட்டார்கள்.

* மோசடி செய்பவர்கள் ஒரே மாதிரியான மின்னஞ்சல் கணக்குகள், லோகோக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி உண்மையான வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். எனவே, வேலைவாய்ப்பு உதவிக்காக பணம் செலுத்துவதற்கு முன் அந்த நிறுவனத்தின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

* வேலை வழங்குவதாகக் கூறும் நிறுவனம் பற்றிய ஆன்லைனில் தேடித் தெரிந்துகொள்ளலாம். நிறுவனத்தின் மீதான புகார்கள், மதிப்புரைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மதிப்புரைகளில் புகார்கள் அதிகமாக இருந்தால் அவர்கள் ஒருவேளை ஏமாற்றும் கும்பலாக இருக்கலாம்.

* ஈமெயில், மொபைல் மூலம் வரும் தகவல்களை அப்படியே நம்பி ஏமாறக்கூடாது. ஒவ்வொரு தகவலையும் வேறு வழிகளில் சரிபார்ப்பது மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும்.

Chella

Next Post

’அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி’..!! கூட்டுறவுத்துறை செயலாளர் அதிரடி அறிவிப்பு..!!

Tue Apr 18 , 2023
ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிய ஜவுளி பிரிவினை தொடங்கி வைத்தார். பின்ன்ர், செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்யப்படும்” […]

You May Like