fbpx

இனி டிஜிட்டல் பேமெண்டிலும்.. களமிறங்கிய ‘ZOMATO’.!! பேமெண்ட் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ரிசர்வ் பேங்க் ஒப்புதல்.!

உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனமான ‘zomato’ நிறுவனத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பாளர் அங்கீகாரம் மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. ஜூமாட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜூமாட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. இந்த தகவலை ஜூமாட்டோ நிறுவனம் பகிர்ந்துள்ளது.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக தொடங்கிய ஜூமாட்டோ நிறுவனத்தின் பயணத்தில் இந்த அங்கீகாரம் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. உணவு விநியோகிக்கும் நிறுவனம் என்பதையும் தாண்டி டிஜிட்டல் பண பரிமாற்ற தளத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது .

இந்த தகவல் தொடர்பாக ஜூமாட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் ” எங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜூமாட்டோ பேமண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பணப்பரிவர்த்தனை தொகுப்பாளராக அங்கீகரிப்பது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி இடம் கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் ஹைலைட் செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஜூமாட்டோ பேமண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல் பண பரிவர்த்தனைகளுக்கான தொகுப்பாளராக மத்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனவரி 24 2024 முதல் ஜூமாட்டோ கூகுள் பே மற்றும் அமேசான் பே போன்ற பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பாளராக செயல்பட இருப்பதை தெரிவித்து இருக்கிறது.

Next Post

"என்னங்கையா சொல்றீங்க.. செல்ஃபி எடுத்தா 6 மாசம் ஜெயில் கன்பார்ம்.." எங்கு தெரியுமா.?

Thu Jan 25 , 2024
கேமரா செல்போன்களின் வருகைப் பிறகு செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் கலாச்சாரம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் பழக்கம் அனேக மக்களிடம் இருக்கிறது. இந்த செல்ஃபி மோகத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் உயிரோடு சில நேரங்களில் சர்ச்சையிலும் முடிகிறது. இந்நிலையில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கும் சட்டத்தினை அமெரிக்க அறிமுகப்படுத்தி இருக்கிறது. […]

You May Like