கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்..
சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்காமல், அவரை பார்க்க வரவழைப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறிய பின்பு தான் தவெக மீண்டும் செயல்பட தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழுவை விஜய் நியமித்தார்.. மேலும் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது., மீண்டும் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். மேலும் SIR பணிகள் குறித்தும் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார். மேலும் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் விஜய் நடத்தினார்..
இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் பகுதி வரை விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 5 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்டது..
தவெக சார்பில் புதுச்சேரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்ட நிலையில், விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.. எனினும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் கூட்டணி கட்சியான பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது..
இந்த நிலையில் விஜய்யின் ரோட் ஷோ தொடர்பாக புதுவை முதல்வர் இன்று காவல்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.. இதை தொடர்ந்து புதுவையில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. விஜய் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.. முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தவெகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. இதனால் தவெகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : விஜயுடன் கைகோர்க்கும் ராகுல் காந்தி..? மாறும் அரசியல் கணக்குகள்.. காங்கிரஸ் தவெக கூட்டணி கன்பாஃர்ம்..?



