பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மிண்டனாவ் தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கி.மீ (18.02 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ கூறியது. மிண்டனாவ் தீவின் சரங்கனி நகருக்கு தென்மேற்கே சுமார் 21 கி.மீ தொலைவில், 65.7 கி.மீ (41 மைல்) ஆழத்தில் இரவு 7:42 மணிக்கு (1142 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு தீவிர நிலநடுக்கம் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. இந்த நிகழ்வு நடந்து 3 வாரங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து, உடனடி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மிண்டனாவ்வின் பல பகுதிகளில் பெரும் சேதமும் ஏற்பட்ட சில வாரங்களிலேயே, அந்நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



