அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான, அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் இந்த மாத தொடக்கத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக கூறியிருந்தார்.. எனினும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்கும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்..
இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து பேசினார்.. விஜய்யும் செங்கோட்டையனும் தனியாக சந்தித்து பேசியதாகவும் அப்போது பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது..
இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்.. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையனை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வரவேற்று அழைத்து சென்றனர்..
பின்னர் அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சுமார் 100 தவெகவில் இணைந்தனர்.. தவெகவில் இணைந்த உடனேயே கட்சிப் பொறுப்பை விஜய் செங்கோட்டையனுக்கு வழங்கினார்..
அதன்படி, செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் செங்கோட்டையனும் ஒருவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.. அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், அதிமுக ஆட்சியில் அவை முன்னவர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. அதிமுக வரலாற்றில் 9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான வெகு சிலரில் செங்கோட்டையனும்.. கொங்கு மண்டலத்தின் அதிமுகவின் முகமாகவும் செங்கோட்டையன் வலம் வருகிறார்.
Read More : Flash : குட்நியூஸ்..! தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை இன்று சரிவு.. இன்றைய நிலவரம் என்ன?



