அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்குமுறையை குலைக்கும் வகையிலும், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டதால் அவர் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கும் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்றும் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்..
முன்னதாக நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்குமும் இல்லை என்று நேற்று இபிஎஸ் கூறிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சமீபத்தில் செங்கோட்டையை அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அவரின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது.. தன்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சி தான் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..



