நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது.. நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் நடிகர் விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.. காரணம் விஜய்யின் பட நிகழ்ச்சிகள் அல்லது கட்சி அறிவிப்பு அல்லது மாநாடு என எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய்யின் மனைவி கலந்து கொள்வதில்லை.. எனவே விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.. மேலும் விஜய்யும் த்ரிஷவும் லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் ஒரு வதந்தி உள்ளது..
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. கடந்த டிசம்பவர் மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
தங்களின் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், விஜய்யும் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் விஜய் அழைத்து சென்றதாகவும் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. 2021-ம் ஆண்டு முதல் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், விஜய்யின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதாவது விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு தெரியவந்ததாக சங்கீதா மனுவில் தெரிவித்துள்ளார்.. திருமண உறவில் விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை அடைந்ததாகவும், சங்கீதா தெரிவித்துள்ளார்..
நடிகை உடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறினாலும், விஜய்யின் நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.. தனது தவறு குறித்து மனம் வருந்தாமல் நடிகை உடனான உறவை விஜய் தொடர்ந்தார் எனவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.. எனவே நீலாங்கரை வீட்டில் தான் வசிக்க அனுமதி வழங்கவும், ஜீவானம்சமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தொகையை வழங்க வேண்டும் என்றும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்..
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.. முதலில் இந்த வழக்கு குறித்து விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.. விஜய் விவாகரத்து வழங்குகிறாரா? அல்லது வழக்கை தொடர்ந்து நடத்துவாரா என்பது இனி தான் தெரியவரும்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.. ஆனால் மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
சங்கீதா சொர்ணலிங்கம் ஒரு இலங்கைத் தமிழர். விஜய்யும் சங்கீதாவும் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு ஜேசன் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கோலிவுட்டில் பல பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்றனர்.. தனுஷ் – ஐஸ்வர்யா, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி என பல பிரபலங்கள் விவாகரரத்து செய்த நிலையில் தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கோரி மனு அளித்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : இளசுகளை வளைத்துப் போடும் அதிமுக..!! அடி சறுக்கும் தவெக..!! செம குஷியில் இபிஎஸ்..!!



