’மார்பக புற்றுநோய்..!! வெட்டி எடுத்தபோது’..!! ’ரொம்ப கஷ்டப்பட்டேன்’..!! எதிர்நீச்சல் நடிகை பகீர் பேட்டி..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிப்பவர் தான் கனிகா. இவர் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். 2002ஆம் ஆண்டு வெளியான ‘five star’ படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். 41 வயதாகும் இவருக்கு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008ஆம் ஆண்டு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார்.

தற்போது சீரியலில் களமிறங்கியுள்ள கனிகா, அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கவுதமியின் பேட்டியில், கனிகா தனது வாழ்க்கையில் துயரமான பக்கத்தை மனம் திறந்து பேசியுள்ளார், அதில் அவர் கூறுகையில், ”புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து அதிகம் பேசும் தன்னுடைய அம்மா மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு நாள் மார்பகத்தில் வலி ஏற்பட்டு எனக்கு போனில் விஷயத்தை கூறினார். உடனே மருத்துவமனை சென்று பலகட்ட சோதனைகளின் முடிவாக அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அது தன்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை எனது அம்மா சந்தித்தார். மிகவும் கஷ்டமான நேரங்களில், காரில் பாடல்களை ஒலிக்க விட்டு அழுவேன். மேலும், சிகிச்சையின் போது தனது அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போனேன். பாதுகாப்பு காரணத்திற்காக தனது தாயின் மார்பகத்தை வெட்டி எடுத்த பிறகு மிகவும் கஷ்டமாகிவிட்டது”. தனது வாழ்வின் மிகவும் துயரமான தருணத்தை பகிர்ந்த கனிகாவின் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

நாட்டை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா.! 9 நாட்களில் 2 மடங்கு தொற்று.! ருத்ரதாண்டவமாடும் ஜேஎன் 1.!

Wed Dec 20 , 2023
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் இருந்ததை விட தற்போது இரு மடங்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் எட்டாம் தேதி கொரோனா தொற்றின் புதிய வகை கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களிலும் கண்டறியப்பட்டிருப்பதாக […]

You May Like