திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. பையனுக்கு பெண்ணும், பெண்ணுக்கு பையனும் பார்க்கும்போது பல பொருத்தங்கள் பார்த்து நம் முன்னோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள். தற்போதைய தொழில்நுட்ப உலகில் இணையதளங்கள் மூலமாகவும் மணமகன், மணமகள் பார்த்து திருமணம் செய்தும் வரும் வழக்கமும் உள்ளது.
ஆனால் சந்தையில் மனமகளை விற்கும் வழக்கத்தை எங்கையாவது கேள்வி பட்டிருக்கீங்களா..? பல்கேரியா நாட்டில் தான் அந்த மணமகள் சந்தை உள்ளது. இந்த சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கும் ஒரு விஷயம். இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இந்த சந்தை அந்நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி மனைவியாக ஏற்று வாழத் தொடங்குகின்றனர். சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன.
நிபந்தனை என்னவென்றால் இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்தவனாக இருக்க வேண்டும். மேலும், இந்த சந்தையில் விற்கப்படும் பெண் ஏழையாக இருப்பது அவசியம். பொருளாதார பலமுள்ள குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்க முடியாது. இத்துடன் வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும். பால்கெரியாவின் இந்த மணமகள் சந்தை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
பெண்களை பெற்ற பெற்றோர் தங்கள் மகள்களுடன் இந்த சந்தைக்கு நம்பிக்கையுடன் வருகிறார்கள் என்றும் மகன்களின் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு பொருத்தமான துணையை சந்தையில் கண்டுபிடித்து வாங்கி செல்வதாக இந்த சந்தையை நிர்வகித்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்தை, ரோமா சமூகத்தில் பல ஆண்டுகளாக ‘மரபு’ என்ற பெயரில் நீடித்து வருகிறது. ஆனால், பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்பும் இந்த நடைமுறை, உலகளாவிய அளவில் கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
Read more: IOB வங்கியில் வேலை.. இளம் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு.. தமிழ் நல்லா தெரிந்தால் போதும்..!!