2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன், 2020-ம் ஆண்டில் வணிக சுரங்கத்திற்கு நன்கு பரிசீலிக்கப்பட்ட மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கை கொண்டு வரப்பட்டது.
வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கங்களின் ஏல முறையின்படி, ஒரு சுரங்கத்திற்கு, தொழில்நுட்பத் தகுதி பெற்ற இரண்டு ஏலதாரர்களுக்குக் குறைவாக இருந்தால், அந்த சுரங்கத்திற்கான ஏலத்தின் முதல் முயற்சி ரத்து செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் ஏலத்தின் இரண்டாவது முயற்சி தொடங்கப்படலாம். இருப்பினும், இரண்டாவது முயற்சியில் மீண்டும் ஒரு ஏலதாரர் மட்டுமே இருந்தால், சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பொருத்தமான முடிவுக்காக இந்த விவகாரம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவுக்கு அனுப்பப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.