fbpx

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபரா நீங்கள்…? ரூ.50,000 வரை கொடுக்கும் மத்திய அரசு…! முழு விவரம்

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. 50,000 உயர்த்தப்பட்ட கடனுடன், 1 வருட காலத்திற்கு ரூ.10,000 வரை பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7% வட்டி மானியம் மூலம், வழக்கமான திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ் பேக் மூலம் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ இந்த நிதிஆண்டு முதல்‌ உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌, சேவைத்‌தொழில்களுக்கு, ரூ.20 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌ அனுமதிக்கப்படும்‌. பொது பிரிவு பயனாளிகளுக்கான மானியம்‌ ஊரகப்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில்‌ 25% எனவும்‌, நகர்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு 15% எனவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌, பழங்குடியினர்‌, இதர பிற்பட்ட வகுப்பினர்‌, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ இராணுவத்தினர்‌, உடல்‌ ஊனமுற்றோர்‌ உள்ளிட்ட சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு மானியம்‌ ஊரகப்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில்‌ 35% எனவும்‌, நகர்‌பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு 25% எனவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதி

18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும்‌, எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம்‌ வரையிலும்‌ சேவைத்‌ தொழிலுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலும்‌ கடனுதவி பெறலாம்‌. உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும்‌ சேவைத்‌ தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும்‌ திட்ட மதிப்பீடு இருந்தால்‌ பயனாளி குறைந்த பட்சம்‌ 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

English Summary

Are you a person who has passed 8th standard…? The central government will give up to Rs. 50,000…! Full details

Vignesh

Next Post

செம குட் நியூஸ்..!! மே 1-ம் தேதி முதல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான தகவல்!

Tue Apr 22 , 2025
Very good news for housewives..!! Cylinder prices will be drastically reduced from May 1st..!! Information released!

You May Like