சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது..
பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் திறப்பதற்காக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.. ஆனால், பிளாஸ்டிக் கவரை கொதிக்கும் எண்ணெய்யில் போடுவதால், இது உணவில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடக்கூடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். சமூக ஊடகங்களில் நெட்டிசனகள் இந்த வைரல் பஜ்ஜியை “மைக்ரோபிளாஸ்டிக் பஜ்ஜி” என்று அழைக்கின்றனர்.
இந்த செயல் பாதுகாப்பற்றது என்றும் சுகாதாரமற்றது எனவும் ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பதிவிட்டு வருகின்றனர்…
மேலும் இதுவரை கண்டிராத மிகவும் கவலைக்குரிய உணவு நடைமுறைகளில் ஒன்று என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்… பலர் இந்த செயலை அருவருப்பானது என்றும் ஆபத்தானது என்றும் அழைத்தனர்.. இன்னும் சிலர், சாலையோர கடை உணவை உண்ணும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.
பயனர்களில் ஒருவர் “என் நண்பர் இந்த கடைக்குச் சென்று உணவு சுவையாக இருந்தது என்றார். அதுதான் அவரது கடைசி வார்த்தைகள்” என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர் ஒருவர் “புதிய பிளாஸ்டிக் சுவையுடன் இப்போது பஜ்ஜி ரெடி” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர் “பசியுடன் வாருங்கள், புற்றுநோயுடன் வெளியேறுங்கள் ” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர் “மைக்ரோபிளாஸ்டிக் இங்கே தற்கொலை செய்து கொண்டது” என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார். ஒரு சில பயனர்கள் சுகாதார அதிகாரிகளை டேக் செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
Read More : டூ வீலர் லைசன்ஸ் இருக்கா? அப்ப நீங்க இந்த புதிய எலக்ட்ரிக் 3 சக்கர வாகனத்தை ஓட்டலாம்..! விவரம் இதோ..