நேற்று அண்ணாமலைக்காக பிரச்சாரம்..!! இன்று அதிமுகவுக்காக பிரச்சாரம்..!! முக்கிய பொறுப்பாளரை தட்டித் தூக்கிய எடப்பாடி..!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவை தொகுதியில் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை களம் காண்கிறார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது சமூகவலைதள பக்கத்தில் “I am waiting” என பதிவிட்டிருந்தார்.  இதற்கு பாஜக திறப்பு பதிலடி கொடுத்த நிலையில், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நான் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்ய வரவில்லை. மக்கள் மனதை வெல்லவே அரசியலுக்கு வந்ததாகவும் மழுப்பலாக பேசியிருந்தார். 

இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பேரவை பிரிவு மாநிலச் செயலாளரும் கோவை பெருமோட்டம் பொறுப்பாளருமான செல்வ பிரபு பாஜகவில் இருந்து விலகி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.  தேர்தல் களத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோவை தொகுதியில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணிநேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை, எடப்பாடி பழனிசாமியின் வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.

Read More : Cancer | வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் லாலிபாப்..!! விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

Chella

Next Post

Velliangiri Hills | வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்..!! ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

Mon Mar 25 , 2024
வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்த 3 பேர் அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று வெள்ளியங்கிரி. கோவை மாநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தலம், தென்கயிலை என்று போற்றப்படுகிறது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோயிலில் இருந்து சுமார் 3,500 அடி உயரம் […]

You May Like