Ponmudi: பதவி கிடைக்குமா?… கிடைக்காதா?… பொன்முடி பதவி விவகார க்ளைமாக்ஸ்!… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Ponmudi: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க மறுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பால், பொன்முடி தன் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்த தினங்களிலேயே இழந்துவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இதனை அடுத்து பொன்முடி மீண்டும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட அன்றே முதலமைச்சர் ஆளுநருக்கும் கடிதம் எழுதினார். இதையடுத்து, முதல்வருக்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.

ஆனால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க இயலாது” என மறுத்திருந்தார். இந்தநிலையில், ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான மனுவை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

Readmore: வார்னிங்.! ZOOM பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கை.!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்.!!

Kokila

Next Post

Election: இன்று மாலை 5மணிவரை தான் டைம்!… அனைத்து மாநிலங்களுக்கும் கெடு!... தேர்தல் ஆணையம் அவசர உத்தரவு!

Thu Mar 21 , 2024
Election: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொது இடங்களில் சுவரொட்டிகள், ஓவியங்களை உடனடியாக அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்த நிலையில், அனைத்து […]

You May Like