டொனால்ட் டிரம்பால் அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (37) இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபா் தோதலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும் என விவேக் ராமஸ்வாமி முன்னதாக தெரிவித்திருந்தார்.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இதுதான் சரியான நேரம்..!!

Tue Jan 16 , 2024
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி […]

You May Like