சனி, கால புருஷ சக்கரத்தில் 10-ம் மற்றும் 11-ம் இடங்களை ஆளும் கிரகம் ஆகும். இது தற்போது மீன ராசியில் (வியாழனால் (குரு )ஆளப்படும் ஒரு ராசி) சஞ்சாரம் செய்கிறது. 2026 ஆம் ஆண்டில், சனி அதே ராசியில் இருக்கும். நும்ரோவாணி நிறுவனத்தின் முதன்மை ஜோதிடர் திரு. சித்தார்த் எஸ் குமார் கூறுகையில், “இந்த ஆண்டில் சனி தனது நட்சத்திரத்தை மாற்றும். ஆண்டின் தொடக்கத்தில், சனி சுமார் 3 வாரங்களுக்கு […]

நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த, இட்லி மற்றும் தோசை மாவை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்துவது இன்றைய நவீன வாழ்க்கையில் வழக்கமாகிவிட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட பலருக்கும் இது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், இவ்வாறு நீண்ட நாட்கள் புளிக்க வைத்த மாவைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதற்குப் பதிலளிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள், பழைய மற்றும் புளித்த மாவைப் பயன்படுத்துவது […]

வெங்காயம் பெரும்பாலும் அதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சல்பர் சேர்மங்கள் காரணமாக கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சூப்பர்ஃபுட் என்று புகழப்படுகிறது. ஆனால் வெங்காயத்தின் உள்ளே நீங்கள் சில நேரங்களில் காணும் அந்த அடர் கருப்பு புள்ளிகள் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். இது பூஞ்சை மாசுப்பாட்டை குறிக்கிறது, இதை மீண்டும் மீண்டும் உட்கொண்டால் உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். வெங்காயம் ஏன் கருப்பாக மாறுகிறது? வெங்காயத்தின் உள்ளே கருப்பு அல்லது அடர் […]

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்வாக அமைப்பையே மாற்றியமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இனி அரசியல் களத்தில் வேறொரு விஜய்யை காண வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகள், விஜய்யின் தவெக எதிர்கொள்ளும் அடிப்படை நிர்வாக சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது […]

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, […]

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் […]

ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டம், ராயாவரம் மண்டலத்தில் உள்ள உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலையான லட்சுமி கணபதி பனா சஞ்சா தயாரிப்பு மையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் […]