உங்கள் இடுப்பு அளவை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உங்கள் இடுப்பு அளவு உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. உங்கள் இடுப்பின் அளவீடு, எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும். இந்த அளவீடு, பெண்கள் தங்கள் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானது. இடுப்பு அளவு – ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்… விலா எலும்புகளுக்குக் கீழே, இடுப்பு எலும்புக்கு மேலே, மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி உடலின் […]

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த முழு பணி, இஸ்ரோவின் வணிக பிரிவு NewSpace India Ltd (NSIL) மூலம் மேலாண்மை செய்யப்பட்டது. இந்திய மற்றும் வெளிநாட்டு […]

திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற […]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் அருகே அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக இன்று அதிகாலை […]

பாட்டாளி மக்கள் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுக்கோப்பிற்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவக்குமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்பாடுகளில் […]

பணவீக்கம், வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதால், ஈரான் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 538 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கைது – இணையம் முடக்கம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை செய்தி ஏஜென்சி அமைப்பு. இதுவரை […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள தொழில் நகரப் பகுதியில் விவாகரத்து பெற்ற பெண்ணான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 7 வயது மகளின் எதிர்காலத்திற்காகவும், தனது தனிமைக்குத் துணையாகவும் சக ஊழியரான அர்ஜுனை நேசித்தார். மனைவியை இழந்த அர்ஜுன் மீது ரேகா வைத்தது உண்மையான காதல். ஆனால் அர்ஜுனுக்கோ, அது வெறும் உடல் இன்பத்திற்காகவும், பணப் பேராசைக்காகவும் போடப்பட்ட ஒரு கொடூரத் திட்டம் என்பது ரேகாவுக்கு தெரியவில்லை. இருவருக்கும் […]

தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் நிலவி வந்த காலதாமதத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயிர்க்கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அதே நாளில் கடன் தொகையை வழங்கும் புரட்சிகரமான திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழகத்தின் அனைத்து […]