திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான […]

மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை தொடர்பு […]

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]

பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]

தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]