தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக […]

வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பால் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு ரூ. 30,000, செம்மறி ஆடு, ஆடு, பன்றி […]

சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ், பிளம்பர் வேலை பார்த்து வருகின்றார். அவருடைய மனைவி கவுசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகின்றார். வழக்கம் போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால், கவுசல்யா வீட்டு வேலைகளை […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாமற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார். மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா […]

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுபற்றிய தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், […]

லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்த காதலியை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அங்கு உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் […]

பாலியல் மாத்திரைகளை உட்கொண்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் கல்லூரி மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைக் கண்ட ராஜ் கவுதம் (25) என்ற வாலிபர், மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றுவதற்கு முன்னதாக ராஜ் கவுதம் பாலியல் ஊக்க மாத்திரை உட்கொண்டுள்ளான். இதனால் […]

வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் […]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், […]