வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் […]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், […]

கர்நாடக அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான சையத். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணி அமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பால கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக […]

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் […]

சீர்காழிக்கு சென்னையில் இருந்து சிதம்பரம் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் சிதம்பரத்திற்கு வந்தபோது பயணிகள் கீழே இறங்கி கடைகளுக்கு சென்றனர். ஐந்து பயணிகள் மட்டும் பேருந்தில் இருந்தனர். இதை தொடர்ந்து சீர்காழியை நோக்கி பேருந்து புறப்பட தயாரான நேரத்தில் பின்புறம் இருக்கும் டீசல் டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பயணிகள் மற்றும் நடத்தினர் பேருந்தில் இருந்து […]

ராஜஸ்தானில் 10 லட்சம் இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் தபோக் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்ப கும்பல் ஒன்று அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை மிரட்டி சிறை பிடித்தனர். அப்போது பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து அதன் பின் மொத்தமாக […]

ஒவ்வொரு வருடமும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் இந்த வருடமும் நவம்பர் 14ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகள் தின போட்டிகள் நடைபெறும். மேலும், அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் […]

இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மீனவர்கள் கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அங்கிருக்கும் மீன்பிடி துறைமுகங்களில் அன்றாட ம் விசைப்படகுகளின் மூலம் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள். இத்தகைய சூழலில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மீனவர்கள் கடலுக்குள் சென்று […]

எவ்வளவுதான் போலீசாரும் பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி படிகள் நின்றவாறு பயணம் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான பேருந்துகள் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்று கூறலாம். ஆனால் அதே நேரத்தில் என்னதான் பேருந்தில் நெரிசல்கள் இல்லை என்றாலும் கூட சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் […]

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை சினேகா. இவருடைய நடிப்பில் வெளியாகின்ற அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுப்பார்கள். திருமணத்திற்கு பின் சினேகா நிறைய படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக சினேகாவின் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியது. சமீப காலமாகவே நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா திருமண வாழ்க்கை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. சினேகாவும் ,பிரசன்னாவும் […]