குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான […]

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி […]

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், […]

உயர் மதிப்பெண் இருந்தால் மட்டுமே 11-ம் வகுப்பில் சேர முடியும் என்பது சமூக நீதிக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயில சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையின் […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி.. சரியான நேரத்தில் செய்யும் வேலை நல்ல பலன்களைத் தரும். தவறான நேரத்தில் செய்யும் வேலை அபசகுன பலன்களைத் தரும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, துணிகளைத் துவைக்க நல்ல நாட்களும் நேரங்களும் உள்ளன. அவற்றைப் பின்பற்றாவிட்டால், இழப்புகளும் பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, வாரத்தின் எந்த நாளில் துணிகளைத் துவைக்கலாம்? எந்த நாளில் துவைக்கக்கூடாது? அவற்றைத் துவைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வியாழன் சனி: வியாழக்கிழமை துணி […]

முருக பக்தர்களால் உலகமெங்கும் மகிழ்வோடு கொண்டாடப்படும் வைகாசி விசாக திருநாள், இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திங்கள் கிழமை அன்று விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நாளை முன்னிட்டு திருத்தலங்களில் திரளான பக்தர்கள் பால் குடம், காவடி, பாத யாத்திரை, தேர் இழுக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். வைகாசி மாதத்தில், விசாகம் நட்சத்திரம் வரும் நாளே முருகப் பெருமான் பூமியில் அவதரித்த திருநாளாக கருதப்படுகிறது. மயிலின் மீது […]

டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய  இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற தம்பதி மேகாலயாவை நோக்கி சென்ற ஹனிமூன் பயணம், தற்போது பெரும் மர்மமான வழக்காக மாறியுள்ளது. தம்பதியர் கடந்த மாதம் சில்லாங், சோஹ்ரா பகுதிகளில் ஹனிமூனுக்காக ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கி இருந்தனர். மே 23 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து செக் அவுட் செய்த பின், சில நிமிடங்களிலேயே அவர்கள் மாயமானது மிகப்பெரும் அதிர்ச்சியை […]

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,000 ஐத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 6,133 செயலில் உள்ள கோவிட் வழக்குகள் உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கேரளா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் […]