மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த நட்பு, இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக முட்புதருக்குள் தவிக்கவிட்டு சென்றுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் வசித்து வருபவர் காத்தவராயன். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது இருக்கையில் இவருக்கு செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து, காத்தவராயன் தனது ஊர் திருவிழாவிற்கு செந்தில் குமாரை அழைத்துள்ளார். […]

தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் […]

பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. அதன் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். தனது நண்பர்கள் பூ போட்டு […]

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவகௌடா மற்றும் இந்தர் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். […]

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரின் மனைவி சாதனா […]

5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி சில மோசடிகள் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அதனால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்களும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறார்கள். அந்தவகையில், நாடு […]

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில், இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளில் ஹனிமூன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். தன்னுடைய 14-வது வயதில் “குமரன் பாட்டு” என்ற கவிதைத் தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் […]