பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “உயிருள்ள என்னை உதாசனம் செய்து விட்டு, என் உருவப்படத்தை வைத்து உற்சாகம் செய்கிறார்கள். என்னை நடை பிணமாக்கி என் பெயரில் நடைபயணம் செல்வதாக அன்புமணி சொல்கிறார். எல்லாமே நாடகம். என்னை […]

பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் […]

சென்னையில் இன்றைய (ஜூன் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் […]

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் பணக்காரர்களைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது அது உலகின் நான்காவது நாடாக மாறியுள்ளது, அங்கு அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், அதாவது பணக்கார செல்வந்தர்கள் அதிகம் வசிக்கின்றனர். நைட் ஃபிராங்க் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025 இன் படி, இந்தியாவில் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 85,698 […]

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு […]