fbpx

ஆகஸ்ட் மாதம், ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அன்லிமிடெட் கால், OTT சந்தாக்கள் மற்றும் 2GB தினசரி டேட்டாவை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.750க்கு வழங்குகிறது. இந்த திட்டம் அப்போதிருந்து பிரபலமான ரீசார்ஜ் பேக்குகளில் ஒன்றாகும். இருப்பினும், ஜியோ இப்போது திட்டத்தைத் திருத்தி உள்ளது.. அதாவது இந்த திட்டத்தை …

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு …

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் உண்டு ஆனால் தனியார் துறையில் இந்த வசதிகள் இல்லை. எனவே தனியார் துறையில் பணிபுரிந்து, ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை விரும்பினால், ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது..…

எதிர்காலத்தில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

19வது இந்திய – அமெரிக்க பொருளாதார மாநாட்டை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.. அப்போது பேசிய அவர் “மத்திய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை …

போக்குவரத்துத்துறையின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன..

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்துத்துறை சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்.. வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி …

கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பூமியை பல சிறுகோள்கள் கடந்து செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பூமியை நெருங்கிச் சென்றது..…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி தணிக்கை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின்போது அதிகளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இவற்றில் ஆக்சிஜன் முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,369 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 46,347 …

எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 8 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ’ரூபி’ என்ற எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்றிரவு திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருக்கும் …