fbpx

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் இருக்கும் சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த …

தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுப்பது கஷ்டம் என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மற்றும்
கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று …

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

பேருந்து மீது இருசக்சர வாகனம் மோதியதால் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு …

அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு …

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை ஏறுமுகத்தில் …

சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி இளவரசி. இவருக்கு சுசில் (21 ) என்ற மகனும் உள்ளார். சுசில் பி காம் வரை படித்துவிட்டு கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியில் நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். சுசில் தினமும் நடன வகுப்பு முடித்து இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். …

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்காக …

சென்னை, அதிமுக ‌இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

அதிமுக பாசமுள்ள கட்சி. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஒரு தொண்டராக கலந்து கொண்டேன். மேலும் தி.மு.க. எம்எல்ஏக்கள் பத்து பேர் என்னுடன் பேசி வருகின்றனர். திமுக ஒரு …

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்திற்கு ‘மஞ்சள் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. …

டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லி மாநிலம் காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக …