தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது.. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி […]

அதிமுக மூத்த தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் முக்கியப் பங்காற்றியவருமான வி.சி.ராமையா, இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்கோட்டை அருகே இன்று காலை இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. வி.சி.ராமையா அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. […]

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம். காரைக்குடி திருப்பத்தூர் -சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த ஒன்பது பெண்கள். இரண்டு ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு முதல்வர் ஸ்டாலின் […]

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த […]

திருமண உறவில் இருக்கும்போது கணவன் அல்லது மனைவி மற்ற ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கள்ளக்காதல் விவகாரங்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இது பல சமயங்களில் விபரீத விளைவுகளையும் கொடூரமான கொலைச் சம்பவங்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. மனைவியின் திருமணத்தை மீறிய உறவை நிறுத்துமாறு கணவன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் செல்ஃபி […]

ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பருவமழை தாக்கம் : இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் […]