புதிய புதிய FASTag விதிகளின்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும். இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எரிபொருளையும் […]

ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய வளாகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா […]

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் […]

ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]

ADGP ஜெயராம் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. […]

கோவிட் மற்றும் காய்ச்சல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதையும் புரிந்துகொள்வோம். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. நேற்று 7,264 இல் இருந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,838 ஆகக் குறைந்துள்ளது. ஒமிக்ரானின் துணை வகைகள் LF.7, XFG, JN.1, மற்றும் NB. 1.8.1 ஆகியவை தற்போது இந்தியாவில் பரவி வருகின்றன. இதுவரை, பாதிக்கப்பட்ட நபர்கள் காய்ச்சல், […]

தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]

இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் என்ன நடக்கின்றதோ அதை அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படி தான் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாக அனைவரும் பாம்பு என்றால் பயந்து நடுங்குகிறோம். ஆனால் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க […]

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் தொடங்கிவிட்டது என்று ஈரானின் உச்ச தலைவர் அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், போர் தொடங்கிவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “போர் தொடங்குகிறது. அலி தனது சுல்பிகருடன் கைபருக்குத் திரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். […]