உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் […]

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள […]

சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அங்கு வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கேளம்பாக்கம் காவல் நிலையப் போலீசார், உடலை ஆய்வு செய்தபோது அவர் கூர்மையான […]

தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த […]

தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசு அளிக்க வேண்டும் என்ற ஆசையில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரான போலி மோசடி வலை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (32) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கும், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் […]

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ஆண்களுக்கும் இதேபோன்ற இலவச பயணத் திட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தமிழன் பார்த்திபன் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் […]

நள்ளிரவில் பாலத்தின் மீது தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் பெற்றோர் இருவரையும் காணவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்ட நிலையில், அவர்களைத் தேடியபோதுதான் கோதாவரி ஆற்றில் தம்பதியினர் குதித்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சாய் – சிரீஷா தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. […]

சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை வினுஷா தேவி, தற்போது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். விஜய் டிவியின் பிரபல சீரியல் மூலம் கவனம் பெற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார். இந்த நிலையில், வினுஷா தேவிக்கும் லிங்கா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினுஷா தேவி முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் […]

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது சித்தப்பாவை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டு தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். அதே வீட்டில் மாணவியின் சித்தி மற்றும் சித்தப்பாவான […]

திருமணப் பரிசு என்றால் நகை, வாகனம், வெளிநாட்டு சுற்றுலா என வழக்கமான பரிசுகள்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை வழங்க முடிவு செய்துள்ளார். பூமியில் ஒரு சொத்து வாங்குவதற்குப் பதிலாக, நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதைத் தனது திருமணப் பரிசாக வழங்க உள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசிக்கும் […]