fbpx

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் …

குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடியிருப்பவர்கள் இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு (குழந்தைகள், கணவன்/ மனைவி, பெற்றோர்) இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விண்ணப்பதாரருக்கும், குடும்பத் …

2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டி க்கும், 31,094 …

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி; மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், …

ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய …

இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

இன்று சென்னையில், 22 …

தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது.

டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் …

தென்னை ஏறும் தொழிலாளர்கள் விபத்து காப்பீட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்..

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. மேலும் மத்திய அரசின் …

பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க ஆர்வம்‌ மிக்க தொழில்‌ முனைவோர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

இத்திட்டம்‌ காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ …