நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. […]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதுக்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் அவர் 2010-ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். பிறகு வில் அம்பு போன்ற படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படவில்லை. 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்தவுடன் யுவன் கூட்டணியில் “பியார் பிரேமா காதல்” படம் மூலம் அனைவராலும் […]

மர்ம தேசம் , ஜீ பூம்பா போன்ற மர்ம தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலையால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் 2ம் தேதி மயங்கியநிலையில் லோகேஷ் கிடந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை் பரிசோதித்தபோது தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]

இரவில் வியர்க்க வியர்க்க நடைபயிற்சி மேற்கொண்டதால் நடிகை குஷ்பூ 21 கிலோ எடை குறைத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் ’’ நான் என்னால் எப்போதெல்லாம் நடக்க முடியுமோ முடிந்தவரை வொர்க்அவுட் செய்வேன் வழக்கமான வேலைகளை செய்வேன் அதிகமாக சாப்பிட மாட்டேன்.’‘ என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து உடலை ஃபிட்டாக்கியுள்ளார். […]

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் தாமதமாக திருமணம் செய்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எனக்கு திருமணமாகும் பொழுது 40 வயது அவருக்கு 50 வயது என்று கூறிய பிரபல நடிகை தங்களுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு […]

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்தை ரத்து செய்வது பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட பதிவில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு எடுத்துள்ளோம் கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக , தம்பதிகளாக , பெற்றோர்களாக , நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் […]

நடிகர் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ் ’ திரைப்படம் வெளியிடப்படும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில்  ‘டான்’ திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]

அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் […]

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு உற்சாகமாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது படம் குறித்தும், படத்தில் […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்ந்த ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கங்கள் நிரம்பி வழிவதால் தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகின்றன. லைகா தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து 4 நாட்களில் 250 கோடி  ரூபாய்க்கு வசூலில் சாதனை செய்துள்ளது. என கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் நாளுக்கு நாள் […]