நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம்தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் வீட்டின் வெளியே, முதல் மாடியில் இருக்கும் படிக்கட்டில் அமைத்துள்ள கண்ணாடியினை, சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர்கள், கல்லால் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியனர். […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ அனைவரின் எதிர்ப்பார்ப்பு படி இன்று வெளியானது. கல்கியின் நாவல் படி, ’பொன்னியின் செல்வன்’ மொத்தம் 5 பாகங்கள் உள்ளது. இப்படி பட்ட பெரிய கதையை எப்படி ஒரு படமாக எடுக்க முடியும் என்று அனைவரின் மனதில் கேள்வி எழுந்தது. பாகுபலி இயக்குநர், ராஜமெளலி கூட எப்படி 140 நாட்களில் படப்பிடிப்பை முடித்தனர் என்ற ஆச்சர்யம் அடைந்தார். சரி, படத்தில் மணிரத்னம் என்ன […]
நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இரும்புத் திரை, ஹீரோ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, சங்கி பாண்டே, ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் […]
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா […]
வெற்றிமாறன் தயாரித்த ’பேட்டைக்காளி’ என்ற வெப் சீரியஸ், வரும் தீபாவளி முதல் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவை வைத்து ’வாடிவாசல்’ மற்றும் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ’விடுதலை’ ஆகிய படங்களை இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்தது. வாடிவாசல் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விடுதலை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கொடைக்கானலில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்ததற்கான […]
தனக்கு எதிராக பொய்யான புகார் அளித்துள்ள சினேகன்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் 11 லட்சம் ரூபாயை நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மத்திய […]
ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வரும் வி.ஜே. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடியைப் பற்றி சில தகவல்கள் பரபரப்பரப்பாக பேசப்பட்டு வரகின்றன.உண்மையாகவும் இருக்கலாம் என்ற வகையில்தான் பேச்சு அடிபடகின்றது. வி.ஜே.மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் திருப்பதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். வரவேற்பும் அதே சமயத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர். இவர்கள் திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆயிரம் விமர்சனங்களையும் தாண்டி தினமும் செய்திகளில் இடம்பிடித்து […]
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் ’பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், தற்போது […]
நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் […]